ராஜினாமா செய்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு..!!

டெல்லி: ஆம் ஆத்மீ எம்.எல்.ஏக்கள் கைலாஷ் கெலாட், ராஜ்குமார் ஆனந்தை புதிய அமைச்சர்களாக நியமிக்க ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். ராஜினாமா செய்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு உள்துறை, நிதித்துறை, பொதுப்பணி, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ்குமார் ஆனந்துக்கு சுகாதாரம், கல்வி, சுற்றுலா, தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை துணைநிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருந்தது. சிபிஐ கைதையடுத்து டெல்லி துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா விலகினார். ஹவாலா பண மோசடி வழக்கில் கைதான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் ராஜினாமா செய்தார்.

Related Stories: