*சிறை அதிகாரிகள் தகவல்
வேலூர் : வேலூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சியுடன் கூடிய திருவிழா வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் வைக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் உள்ளது.இந்த கண்காட்சியில் உள்ள அரங்கில், ‘கூண்டுக்குள் வானம்’ என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் வேலூர் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள கைதிகளின் மனமாற்றத்திற்காக நூலகம் அமைப்பதற்காக புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த அரங்கில் பொதுமக்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், தங்களின் புத்தகங்களை வழங்கலாம்.சென்னையில் சமீபத்தில் நடந்த புத்தக கண்காட்சியில் இதுபோன்ற அரங்கம் அமைக்கப்பட்டது. அந்த அரங்கில் சுமார் 15 ஆயிரம் புத்தகங்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வழங்கினர். வேலூர் ேநதாஜி ஸ்ேடடியத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெண் எஸ்ஐ மற்றும் பொதுமக்கள் புத்தகங்களை வழங்கினர். கண்காட்சி நடைபெறும் வரும் 6ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சிறைவாசிகளுக்கு அமைக்கப்பட உள்ள நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.