75 ரயில் நிலையங்கள் நகர்ப்புற ரயில் நிலையங்களாக மாற்றம்.! நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்: ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் பேட்டி

கரூர்: நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ஒன்றிய  ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட ரயில் நிலையத்தில் ஒன்றிய ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் ஆய்வு மேற்கொண்டார். கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறை, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை போன்றவற்றை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், இந்தியா முழுவதும் 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. விரைவில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா காலத்துக்குப் பின்னர் ரயில் பயணிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறிய அவர், மும்பை ஐஐடி மாணவர்கள் இதற்கான செயலி ஒன்றை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ரயில்வே துறையில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 75 ரயில் நிலையங்கள், நகர்ப்புற ரயில் நிலையங்களாக மாற்றப்படும் என்றும் கூறினார். இந்தியாவில் 100 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் கரூர் ரயில் நிலையமும் ஒன்று. கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை தொடர பரிசீலனை செய்யப்படும். கரூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: