கோயம்புத்தூரில் நடைபெற உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய இணைய வழிப்பதிவு ஏற்பாடு

கோவை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தேசிய, மண்டல, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கண்காட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்புகள் வழங்கி வருகிறது. இக்கண்காட்சி நடைபெறும் தகவல் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு சில மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சென்றடையா சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்நிலையை போக்க ஏதுவாக கண்காட்சிகள் நடைபெறும் விவரம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய ஏதுவாக இணைய வழிப் பதிவு (Online Registration) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகள் கோயம்புத்தூரில் 04.03.2023 முதல் 12.03.2023 வரை நடைபெற உள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையத்தில் பதிவு செய்ய மேலாண்மை இயக்குநர்/ முதன்மை செயல் அலுவலர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Related Stories: