கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கட்சி திரிணாமுல் காங்கிரஸ். இக்கட்சிக்கு பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கணக்க்கு உள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 6 லட்சத்து 50 பேர் பின் தொடரும் திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு யுஹா லேபெஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடந்து டுவிட்டர் கணக்கை மீட்க திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் நிறுவனத்தை அனுகியுள்ளது.
இதையடுத்து, ஹேக் செய்யப்பட்ட கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர டுவிட்டர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் திரிணாமுல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.