ஆலமரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் ஆர்ப்பாட்டம்

செய்யூர்: சூனாம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அங்கிருந்த ஆலமரம் வெட்டி அகற்றப்பட்டதற்கு பசுமை தாயகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் பேருந்து நிலையம் உள்ளது.

இங்கு, சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில், இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதனையொட்டி, சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் ஆலமரத்தை அகற்றினர்.

இதனை கண்டித்து நேற்று பசுமை தாயகம் சார்பில் அகற்றப்பட்ட மரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மரத்தை வெட்டிய அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதில், பசுமை தாயகம் இணை பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில துணை பொது செயலாளர் கண்ணன், பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஐயப்பன், பசுமை தாயகம் மாவட்ட தலைவர் சந்திரசேகர், ஆகியோர் தலைமை தாங்கினர்.

Related Stories: