புனேவில் உள்ள பால் பண்ணையில் பால்வள மேம்பாடு குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு

திருமலை : புனேவில் உள்ள பால் பண்ணையில் பால்வள மேம்பாடு குறித்து தேவஸ்தான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தேசிய  மாடுகளை கொண்டு திருப்பதி ஏழுமலையான்   கோயிலில் தினமும் தேவைக்கான பால், தயிர் மற்றும் நெய்யை சொந்தமாக உற்பத்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, நாட்டில் உள்ள சிறந்த பழமையான தேசிய பசு பண்ணைகளை பார்வையிட்டு பால் பண்ணைகளின் செயல் திறனை ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இணை செயல் அதிகாரி சதா பார்கவி தலைமையில் தலைமை பொறியாளர் நாகேஸ்வர், கோ சாலை இயக்குநர் ஹரிநாத், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக விரிவாக்க இயக்குநர் வெங்கடநாயுடு கொண்ட குழுவினர் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மஞ்சரூ கிராமத்தில் நேற்று சென்றனர்.  அந்த கிராமத்தில் உள்ள பராக் பால் பண்ணையின் பாக்யலட்சுமி பால் பண்ணையை ஆய்வு செய்தனர்.

இந்த பால்பண்ணையில் உள்ள தேசிய மாட்டு இனங்கள் மூலம் அதிகபட்ச பால் உற்பத்திக்கு பின்பற்றப்படும் முறைகளை கள அய்வு செய்தனர்.  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த பணியாளர்களை கொண்டு பால் நிர்வாகம் எவ்வாறு  எடுக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.  மாடுகளுக்கு சிரமம் இல்லாமல் ஒரே நேரத்தில் 50 மாடுகளிடம் இருந்து எளிதாக பால் கறப்பதற்கான இயந்திரங்கள் மூலம் ஆய்வு செய்து, அங்குள்ள அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

இதில் பாக்யலட்சுமி பால் பண்ணை நிர்வாகம், பால் பண்ணை நிர்வாகம், தொழில்நுட்ப அமைப்பு, செலவு போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை தருமாறு அதிகாரிகள் குழுவினர் கேட்டுக் கொண்டார்.  இதற்காக  விரைவில் அறிக்கை வழங்குவதாக பண்ணை நிர்வாகத்தினர்  தெரிவித்தனர்.

Related Stories: