ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரங்களில் மிளகாய் அதிகம் பயிரிடக் கூடிய கிராமப் பகுதிகளில் மிளகாய் உலர் களம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அதிகமான மிளகாய் பயிரிடப்படும் பகுதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும் பிச்சனா கோட்டை, சிலுகவயல், இரட்டையூரனி, வில்லடி வாகை, புல்ல மடை, சவேரியார் பட்டிணம், வல்லமடை, செங்குடி, பூலாங்குடி, வானியக்குடி, அரியான்கோட்டை, பணிதிவயல், நகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான மிளகாய் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளையக் கூடிய மிளகாய் வத்தலை ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒவ்வொரு சனி கிழமையும் நடைபெற கூடிய மிளகாய் சந்தையில் விவசாயிகள் கொண்டு போய் விற்பனை செய்வது வழக்கம். இந்த மிளகாய் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாகும். இங்கு நடைபெறும் சந்தைக்கு மதுரை, திருச்சி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
