பாரதிய ஜனதா கட்சி அழகுபடுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருவதாக காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்..!!

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி அழகுபடுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார். செய்தியாளர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமலாக்கப்பிரிவு சோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் அப்பாவிகளாகி விடுகின்றனர். பாஜக சலவை இயந்திரத்தில் போடப்பட்டவுடன், சோதனையை சந்தித்தவர்கள் தூய்மையாகி விடுவதாக கார்கே பேசினார். இன்னும் எத்தனைக்  காலத்துக்கு அமலாக்கப்பிரிவின் சோதனைகள் தொடரும் என தெரியவில்லை.

அமலாக்கத்துறை சோதனை காங்கிரசுக்கு பூஸ்டர் டோஸ். பிரதமருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த ஊக்க மருந்தாக அமலாக்கப்பிரிவின் சோதனை உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என காங்கிரஸ் கருதுகிறது; பாஜகவுடன் எந்தவித சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், வலுவாக எதிர்த்து வரும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. எந்தவித இரட்டை நிலைப்பாட்டையும் கொண்டிருக்காமல் பாஜகவை காங்கிரஸ் எதிர்க்கிறது என கூறினார்.

Related Stories: