50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி உறுதி: திருமாவளவன்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி உறுதியான ஒன்று. குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இரட்டைஇலை சின்னம் என்ற ஒரே ஒரு சாதகமான அம்சத்தை தவிர, அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக கூட களத்தில் இல்லை.

பாஜகவினர் சாதி, மத உணர்வுகளை தூண்டுகின்றனர். தமிழகத்தில் அதிமுகவை 4 கூறுகளாக உடைத்தது மோடி அரசு தான். இரட்டை இலை சின்னம் வழக்கில், பழனிசாமி அணிக்கு ஆதரவான நிலையை மோடி அரசு எடுக்க காரணம், வரும் நாடாளுமன்ற தேர்தல் தான் என்றார்.

Related Stories: