படகு மூலம் ராமேஸ்வரம் வந்த இலங்கை நபரிடம் போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: படகு மூலம் ராமேஸ்வரம் வந்த இலங்கை நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க இலங்கையை சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். இலங்கை தலைமன்னாரில் இருந்து படகில் வந்ததாக தெரிவித்ததுடன் தன்னை அகதியாக பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரை சோதனை செய்த போலீசார் அவரிடம் இருந்த இலங்கை அரசின் அடையாள அட்டையை பார்த்தனர். இதன் மூலம் இவர் இலங்கை மன்னார் மாவட்டம், எருக்கலம்பட்டி தோட்டவெளி ஜோசப் வாஸ் நகரை சேர்ந்த செல்வராஜ் (54) என்பது தெரிய வந்தது. இவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறியதால் ராமேஸ்வரம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: