பிபிசி நிறுவனத்தில் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்கள்: வருமான வரித்துறை விளக்கம்

டெல்லி, மும்பை நகரங்களில் பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக, மத்திய வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்; பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பரிவர்த்தனைகளை பிபிசி நிர்வாகம் கணக்கில் காட்டவில்லை. டிவி, டிஜிட்டல், ரேடியோ என பல வழிகளில் பிபிசி செய்திகள் மூலமாக வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது. சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்றும் சோதனையில் தெரிய வந்தது எனவும் தெரிவித்த்தியுள்ளது.

Related Stories: