சுந்தர் பிச்சை, நாடெல்லா வரிசையில் யூடியூப் நிறுவனத்தின் சிஇஓ- வாக இந்திய வம்சாவளி நீல் மோகன் பொறுப்பேற்பு!!!

சான் புருனோ: யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஏஓ)யான சூசன் வோஜ்சிக்கி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, இந்திய வம்சாவளியான நீல் மோகன் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற நீல் மோகன், 2008ல் கூகுளில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய இவர், 2012ம் ஆண்டு யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார்.

கண்டன்ட் பாலிசி, யூ டியூப்பில் ஷார்ட் வீடியோ என பல மாற்றங்களை யூடியூப் செயலியில் கொண்டு வந்தார்.

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் முன் நீல் மோகன் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பணிபுரிந்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் சிஏஓவாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாடெல்லா ஆகியோர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்த வரிசையை தற்போது நீல் மோகன் இணைந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் வரை அதை சிஇஓவாக பராக் அக்ரவால் என்ற இந்திய வம்சாவளியினர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: