வாக்காளர் தின ஓவிய போட்டி: ஒட்டன்சத்திரம் அரசு பள்ளி மாணவி வெற்றி

ஒட்டன்சத்திரம்: மாவட்ட அளவில் நடந்த வாக்காளர் தின ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் அரசு பள்ளி மாணவிக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி நடந்தது. மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு  மாணவி பிரித்திகா கலந்து கொண்டார்.

இதில் மூன்றாம் பரிசை அவர் பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, ஓவிய ஆசிரியர் மாரியம்மாள், பட்டதாரி ஆசிரியர் பாண்டியராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: