ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்பு எதிரொலி : பாஜகவில் இருந்து விலகினார் சி.பி. ராதாகிருஷ்ணன்..

சென்னை : ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் வழங்கி உள்ளார். அண்மையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தேசிய கயிறு வாரிய முன்னாள் தலைவருமான சிபி.ராதாகிருஷ்ணனை நியமித்து  ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.இவர் வரும் பிப்.,18 ம் தேதி ஜார்கண்ட் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.இவர் 2 முறை பாஜக மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

ஆளுநராக பொறுப்பேற்க உள்ளவர் எந்த கட்சி பொறுப்புகளிலும் இருக்க கூடாது என்பது விதிமுறையாகும்.  எனவே பாஜகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும்  சிபி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ராஜினாமா கடிதத்தை சென்னை கமலாலயத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இன்று வழங்கினார்.இதையடுத்து அண்ணாமலை உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாதாக சென்னை கமலாலயம் வந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் மாலை அணிவித்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: