கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். போர் முனையில் யாரென்றே தெரியாமல் அவர்கள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருந்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
