கோவை: இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கம் (IAGES) என்பது, எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் முன்னேற்றத்தை இந்தியா மற்றும் பிற பகுதிகளிலும் ஊக்குவிக்கவும் பரப்பவும் உருவாக்கப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களின் அமைப்பாகும். கோவையில் நேற்று பிப்.11-ல் நடைபெற்ற அவர்களின் 20-வது ஆண்டு மாநாட்டில் ஈஷா நிறுவனர் சத்குரு சிறப்புரை ஆற்றினார். ஆரோக்கியம் வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒத்திசைவை உருவாக்க வேண்டும். உடல் ஒருங்கிணைப்பு, உடல் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு, உடல் ரசாயனத்தின் ஒருங்கிணைப்பு அல்லது உடலாற்றலின் ஒருங்கிணைப்பு ஆகிய மூன்று விஷயங்கள் நடைபெற்றால், பெரும்பாலான ஆரோக்கியம் நிர்வகிக்கப்பட்டுவிடும் என்றார்.
ஆரோக்கியத்தின் கலாச்சாரத்தை உருவாக்குவது குறித்து இந்திய இரைப்பை குடல் எண்டோசர்ஜன்கள் சங்கத்தின் 20-வது ஆண்டு மாநாட்டில் சத்குரு சிறப்புரை
- சத்குரு
- 20வது வருடாந்த மாநாடு
- இந்திய இரைப்பை குடல் எண்டோசர்சன்ஸ் சங்கம்
- on சுகாதார கலாச்சாரம் கட்டிடம்