2022-23ம் நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கி ரூ.93,003 கோடி வர்த்தகம்: இயக்குனர் காமகோடி தகவல்

சென்னை: 2022-23ம் நிதியாண்டில் மட்டும், சிட்டி யூனியன் வங்கி ரூ.93,003 கோடி வர்த்தகம் செய்துள்ளது என வங்கியின் இயக்குனர் காமகோடி தெரிவித்தார். இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் 2022-23ம் நிதியாண்டின், மூன்றாம் காலண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி வெளியிட்டு கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1430 கோடியாகவும், அதில் இதரவருமானம் ரூ.224 கோடியாகவும் உள்ளது. மொத்த லாபம் ரூ.497 கோடியாகவும், நிகர லாபம் ரூ.218 கோடியாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ.93,006 கோடியாக உள்ளது. மேலும் வங்கியின் வைப்பு தொகை மற்றும் கடன்கள் முறையே ரூ.49,997 கோடியாகவும், ரூ.43,009 கோடியாகவும் உள்ளது.

மேலும், டிசம்பர் மாதத்துடன் முடிந்த ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,102 கோடியாகவும் அதில் இதர வருமானம் ரூ.615 கோடியாகவும், மொத்த லாபம் ரூ.1,400 கோடியாகவும், நிகர லாபம் ரூ.719 கோடியாகவும் உள்ளது. வங்கியின் நிகர வராக் கடன் 2.67% ஆகவும் வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.51% ஆகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.6,335 கோடியில் இருந்து ரூ.7193 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கி இன்று வரை 752 கிளைகள் மற்றும் 1,681 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களை கொண்டு செயல்பட்டுவருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: