திருவாரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக்குழு ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே நெல்  நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தொடர்ந்து 4 நாட்கள் பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதுகாப்பு வலை தமிழ்நாடு அரசு கோரிக்கை ஏற்று ஒன்றியக்குழு இன்று திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகலிடம் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் நெல்லின் ஈரப்பதம் 17% இருக்கவேண்டும் என ஒரு நிபந்தனை இருக்கிறது, ஆனால் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி கடந்த 4 நாட்களாக பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நேர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் விவாசிகளின் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் கொள்முதல் செய்யப்படாமல் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல்  தேங்கிக்கிடந்து வருகின்றது.

இந்த நெல்லின் ஈரப்பதம் 22% மேல் உயர்த்தவேண்டும் என  விவசாயிகள் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இத்தகை சூழலில் தமிழ்நாடு முதல்வர் விவாசிகள் கோரிக்கை ஏற்று ஒன்றிய அரசுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினார், அந்த கடிதத்தில் மூலமாக இந்து ஒன்றிய குழுவினர் இரண்டாவது நாளாக, அதாவது முதல்நாளாக நாகப்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றியகுழுவினர், இன்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தில் நெடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், சென்னையில் உள்ள தரக் கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் யூனுஸ், அதை போல் பெரம்பூரில் உள்ளதரக் கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன் ஆகியோர் அடங்கிய ஒன்றியகுழுவினர், அதைபோல் திருவாரூர் ஆட்சியர் சுருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வு மேற்கொள்ளும்பொழுது விவசாயிகள் குறைகளை கேட்டு அறிந்து வருகின்றனர். அதைபோல் நெல் மட்டும் பயிர் சேதங்கள் ஆய்வு செய்து அதன் மாதிரிகளை தமிழ்நாடு உணவு பரிசோதனை குடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஒன்றிய அரசுக்கு அறிக்கை விடுவதாக அவரகள் தெரிவிக்கின்றார்கள். தொடர்ந்து விவசாயிகள் டெல்டா மாவட்டத்தில், தொடர்ந்து இடர்ப்பாடு சந்தித்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்று தற்போது ஒன்றியகுழுவினர் விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல்  நிலையத்தில் குறைகளை கேட்டறிந்து வருகின்றார்கள்.      

Related Stories: