பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்தால் புகார் அளிக்கலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்கிறது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவ்வாறு மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுனரின் பேச்சைக் கேட்க வில்லையென்றால் காவல்துறையில் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பேருந்துகளில் பயணம் செய்யும் போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்துத்துறை தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தால், அருகிலுள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது 100 எண்ணை அழைத்தோ புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: