அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கும் திட்டமானது, 1987ம் ஆண்டு முதல் பழைய நடைமுறையில் இருந்தது. இத்திட்டத்தை அதிமுக அரசு கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 31ம்தேதியுடன் ரத்து செய்து விட்டது. மாற்றாக புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது.

 இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம், பணிக் கொடை, குடும்ப ஓய்வூதியம் என எந்த பயனும் இல்லை. இதை உணர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இத்திட்டத்தை ஏற்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அத்திட்டத்தில் இணையவும் இல்லை. மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தையே இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகிறது.  இதைப்போன்றே திரிபுரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் அரசுகளும் புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து தங்களை விடுவித்து கொண்டுள்ளன. எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக கொண்டு வந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனை தமிழக அரசு காத்திட வேண்டும்.

Related Stories: