ஒன்றிய அரசுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: பெரம்பூரில் ஒன்றிய அரசை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 2023ம் ஆண்டு பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி சுமார் ₹150 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், இது சென்ற ஆண்டை விட சுமார் ₹90 கோடி குறைவாக உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு இதை செய்துள்ளதாக கூறி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, பெரம்பூர் பகுதி செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் மற்றும் ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்து, ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன. மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு தனது செயலை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.

Related Stories: