நாகை அருகே தெருவில் பூட்டி இருந்த வீட்டில் திடீரென மேற்கூரை தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை

நாகை: மஞ்சகொல்லை ஊராட்சிக்குட்பட்ட புத்தூர் வேளாளர் தெருவில் பூட்டி இருந்த வீட்டில் திடீரென மேற்கூரை தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சகொல்லை ஊராட்சி உட்பட்ட புத்தூர் வேளாளர் தெருவில் வசித்து வருபவர் முருகானந்தம் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் செய்து வருகிறார் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரது வெளியூர் சென்றிருந்த நிலையில் முருகானந்தம் மதியம் வீட்டில் வந்து மத்திய உணவருந்தி விட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். பூட்டி இருந்த வீட்டில் திடீரென மேற்கூரை தீப்பிடித்து எறிந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அலறி எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தும் தீ மல மலவென கொழுந்து விட்டு எறிய தொடங்கியதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து நின்றனர்.

தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது அடுத்து விரைந்து வந்த மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைத்தனர் ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியது வீட்டில் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன தீ விபத்து குறித்து முதல் கட்டமாக மின்கசிவு காரணம் என தெரியவந்துள்ளது  விபத்து குறித்து நாகை நகர காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வவருகின்றனர்.

Related Stories: