திருவாடானை அருகே அரசு பள்ளி சமையலறைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவாடானை: திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப்பள்ளியில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்தப் பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக பள்ளியின் அருகில் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சமயலறை கட்டிடத்தின் சுவர்களிலும், தரைதளத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், தற்சமயம் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இங்கு மதிய உணவு சமைக்க வரும் ஊழியர்கள் தினசரி ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த பள்ளி சமையலறை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய சமயலறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசுப் பள்ளியில் உள்ள சமயலறை கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக வரும் ஊழியர்கள் தினசரி ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த இந்தப் பள்ளி சமையலறை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றனர்.

Related Stories: