குளித்தலை குறப்பாளையம் பிரிவு ரோட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வழிகாட்டி பெயர் பலகை

*வழிமாறி செல்லும் வாகன ஓட்டிகள்

*நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

குளித்தலை : குளித்தலை குற பாளையம் பிரிவு ரோட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வழிகாட்டி பெயர் பலகையால் வாகன ஓட்டிகள் வழிமாறி செல்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த திருச்சி, கரூர் புறவழிச்சாலையில் உள்ளது பிரிவு சாலை. இவ்வழியாகத்தான் தினமும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ,காங்கேயம், கரூர் மார்க்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள் செல்கிறது. அதேபோல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இந்த புறவழிச் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மேலும், பெரம்பலூர், துறையூர், முசிறி, சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி முதல் கரூருக்கோ சொல்ல வேண்டுமென்றால் இந்த குறப்பாளையம் பிரிவு ரோட்டில் வந்து தான் செல்ல வேண்டும்.அதேபோல் மதுரை, துவரங்குறிச்சி, திண்டுக்கல், மணப்பாறை, தரகம்பட்டி, பாளையம் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் குளித்தலை வழியாக குறைப்பாளையம் பிரிவு ரோடு சென்று அதன் பிறகு திருச்சி கோ கரூருக்கோ செல்கிறது. இதனால் தினமும் குறபாளையம் பிரிவு ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்கின்றன.

இந்நிலையில் திருச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலை குறப்பாளையம் பிரிவு ரோட்டின் இறக்கத்தில் வழிகாட்டு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி, குளித்தலை, தஞ்சாவூர் என போடப்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலத்திலிருந்தும் மற்றும் கோயம்புத்தூர், ஈரோடு, காங்கேயம், பல்லடம், கரூர் பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பயணிகள் வாகனங்கள் திருச்சி வழியாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த குறைப்பாளையம் பிரிவு ரோட்டில் வழிகாட்டி பழகிய பார்த்தவுடன் புறவழிச் சாலையில் இருந்து கீழ இறங்கி குளித்தலை, மருதூர் மருதூர் பிரிவு ரோடு சென்று மீண்டும் திருச்சி கரூர் புறவழிச்சாலையை அடைகின்றனர்.

இதனால் குளித்தலை நகரப் பகுதியில் ஒரு சில நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வரும் வெளியூர் பயணிகள் செய்வது அறியாது இந்த வழிகாட்டிப் பலகையை பார்த்துவிட்டு மிகவும் குழப்பம் அடைந்து வருகின்றனர்.மேலும் மேற்குப் பகுதியில் இருந்தும் கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை செல்ல வேண்டும் என்றால் இந்த குறை பாளையம் பிரிவு ரோட்டில் வந்து தான் திரும்ப வேண்டும்.

அதற்காக இந்த வழிகாட்டி பலகையில் திருச்சி, குளித்தலை, தஞ்சாவூர் என்று இருப்பதை முசிறி, குளித்தலை , மணப்பாறை என வழிகாட்டி பலகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் வெளியூர் பயணிகள் அச்சமின்றி நேராக திருச்சி, கரூர் சாலையில் சென்று நேரத்தை மிச்சப்படுத்த முடியும். மேலும் நகரப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில் இருந்து வரும் அதனால் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வழிகாட்டிப் பலகையில் உள்ள ஊர் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: