மகன் வேலைக்கு செல்லாததால் தாய் தூக்கிட்டு தற்கொலை

வேளச்சேரி: பெரும்பாக்கம், எழில் நகர், 61வது பிளாக்கை சேர்ந்தவர் பிரியா (46). இவர் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார். இவரது கணவர் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் முனீஸ்வரன் (21). இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்துள்ளார். இதனால், பிரியா கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் பிரியா வீடு திரும்பினார். இதன்பின்னர், நீண்டநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது மின்விசிறியில் தூக்கிட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டதை  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த  பெரும்பாக்கம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: