தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. மேலும் தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. அதன் பிறகு கடந்த 1ம் தேதி 2023-2024ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320 ஆக விற்கப்பட்டது.

2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து சவரன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு தங்கம் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,365க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,920க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,373க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,984க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.304 உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Related Stories: