அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் சம்பா சாகுபடிக்காக, கால நீட்டிப்பு

சென்னை: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிற்களுக்கு 08.02.2023 முதல் 28.02.2023 முடிய சம்பா சாகுபடிக்காக, காலநீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 691.20 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பிரதானக் கால்வாய் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு 08.02.2023 முதல் 28.02.2023 முடிய சம்பா சாகுபடிக்காக, கால நீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 532.22  மில்லியன் கன அடிக்கு மிகாமலும், அமராவதி ஆற்றின் மதகு வழியாக அமராவதி அணையிலிருந்து  தண்ணீர் திறந்து விட  அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: