அதானி விவகாரத்தில் போராளி அமைதி காப்பது ஏன்?.. மம்தா பானர்ஜிக்கு ஆதிர் ரஞ்சன் கேள்வி..!

டெல்லி: அதானி விவகாரத்தில் போராளி மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன் என்று மம்தா பானர்ஜிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தராததால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘அதானியுடன் மம்தா பானர்ஜிக்கு நல்ல உறவு இருப்பதாக கருதுகிறேன்; பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக மம்தா பானர்ஜி எதுவும் பேசவில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் மம்தா பானர்ஜியை ‘போராளி’ என்று அழைக்கிறோம். ஆனால் இப்போது அவர் அமைதியாகிவிட்டார்’ என்று கூறினார்.

Related Stories: