அன்று பாஜ பெரிய கட்சி இன்று அதிமுக பெரிய கட்சி: அண்ணாமலையை விளாசும் கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டி: மோடி அரசாங்கம் தன்னுடைய நண்பரான, ஒரு தனி நபரை  வளர்ப்பதற்காக இந்த அராஜக செயலை செய்து இருக்கிறது. மாணவர்களுக்கு கடன் வழங்குவது தற்போது  நிறுத்தப்பட்டுள்ளது. அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கின்ற கடன்,  அளவுக்கு அதிகமாக போயிருக்கிறது. மக்களுக்கு கொடுக்க  வேண்டிய நிதியை அதானிக்கு அளிப்பது துரோகமானது. இதை காங்கிரஸ் கடுமையாக  எதிர்க்கின்றது. ஈரோடு தேர்தலில் எங்கள் வேட்பாளர்  மகத்தான வெற்றி பெறுவார். பரிதாப நிலையில் பாஜ கட்சி  உள்ளது. என்ன பரிதாபமான நிலை என்றால் அதிமுகவைவிட நாங்கள் பெரிய கட்சி  என்று அண்ணாமலை சொல்லி இருந்தார். இன்றைக்கு அதிமுக  பெரிய கட்சி. அவர்களே நிற்கட்டும் என்று சொல்லி வெற்றிகரமாக வெளியே  வந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Related Stories: