ரூ.6 கோடி வங்கி கடன் 6 கடைகளுக்கு சீல்

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில், ரூ.6 கோடி வங்கி கடன் பெற்றவர், திருப்பி செலுத்தாததால், அவரது 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சேகரன். அவரது தங்கை தேவி ஆகியோர் ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் தங்கள் பெயரில் உள்ள கட்டிடம் உள்பட 3 கிரவுண்டு இடத்தை கடந்த 2016ம் ஆண்டு சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில், அடமானம் வைத்து, ரூ.6 கோடியே 80 லட்சம் தொகை பெற்றுள்ளனர். ஆனால், கடந்த 2017ம் ஆண்டு முதல் வங்கிக்கு எந்த தொகையும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.  

இதையடுத்து, வங்கி நிர்வாகத்தினர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த ஆண்டு 9வது மாதம் 22ம்தேதி வங்கிக்கு சாதகமாக செங்கல்பட்டு, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அடமானம் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள 6 கடைகளை, அட்வகேட் கமிஷனர் கிங்ஸ்லி பால்ராஜ் தலைமையில், கையகப்படுத்தி வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்க கூறினர். இதையடுத்து, மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் டி மார்ட்டினிடம் கொடுத்த மனுவின்பேரில், நேற்று போலீசார் முன்னிலையில் 6 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டது.

Related Stories: