விக்டோரியா கவுரி உள்பட சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம்: ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா கவுரி உள்பட 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.

எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம்:

வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் உள்ளிட்ட 56 வழக்கறிஞர்கள், விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க வலியுறுத்தி கடிதம் எழுதினர். எதிர்ப்பை மீறி விக்டோரியா கவுரி நியமனத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர். விக்டோரியா கவுரியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: