சுற்றுலாத்துறை அதிகாரி தகவல் தீவுத்திடல் பொருட்காட்சியை 4.88 லட்சம் பேர் பார்வை

சென்னை: தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை, இதுவரை 4.88 லட்சம்  பேர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது:  தமிழ்நாடு  சுற்றுலாத்துறை சார்பில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின்  தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. தீவுத்திடலில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட  ஓட்டல்கள் தமிழ்நாடு உணவகம், 10,000 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி  திரையரங்கம், அரசின் திட்டங்களையும்  அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செயல் மாதிரிகளுடன் 48 துறைகளின்  அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பனிக்கட்டி உலகம், சிறுவர் ரயில்,  மீன் காட்சியகம் உள்ளிட்ட 32  க்கும் மேற்பட்ட பல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்  பெற்றுள்ளன. மேலும் 125 சிறிய கடைகள், 60 தனியார் அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன. 70 நாட்கள்  நடைபெறும் பொருட்காட்சியில், 29வது நாளான நேற்று முன்தினம் மட்டும் 16,165  பெரியவர்கள், 3,915 சிறுவர்கள் என மொத்தம் 20,080 பேர் பார்வையிட்டுள்ளனர். இதுவரை 3,96,120 பெரியவர்கள், 92,485 குழந்தைகள் என மொத்தம் 4,88,605 பேர் பார்வையிட்டுள்ளாதாக சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: