எடப்பாடி மாற்றம் கொடுப்பார்: -செல்லூர் ராஜூ சொல்கிறார்

மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பெருவாரியான வாக்குகள் பெறும். எடப்பாடியார்  பக்கம்தான் தொண்டர்களும், ஆதரவாளர்களும் உள்ளனர். மிகப்பெரிய மாற்றத்தை எடப்பாடி தேர்தலில் கொடுப்பார்’’ என்றார். ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்த கேள்விக்கு பதில் கூற மறுத்து, பிறகு பேசுவோம் என கூறிவிட்டு சென்றார்.

Related Stories: