பக்கா சூரன் டேன் டீ குடியிருப்பில் 40 ஆண்டுகளாக கழிப்பறை வசதி இல்லாமல் அவதி

குன்னூர்: குன்னூர் அருகே பக்கா சூரன் டேன் டீ குடியிருப்பு பகுதியில் 40 ஆண்டுக்கு மேலாக கழிப்பறை வசதி இல்லாமல் தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட பக்காசூரன் மலை டேன் டீ குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 60 தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன், கடந்த 40 ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் மக்கள் பயன்படுத்த கழிப்பறை என்பதே கிடையாது.இயற்கை உபாதையை கழிக்க வனப்பகுதிக்குள் பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் செல்ல வேண்டியுள்ளதால் கரடி, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கழிப்பறை இல்லாதததால் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கழிப்பறை அமைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: