அதிமுகவில் புதிதாக 11 நிர்வாகிகள் நியமனம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் அமைப்பு செயலாளர், செய்தித்தொடர்பாளர், பேச்சாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிதாக 11 நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்த மார்க்கெட் கண்ணன், அமைப்பு செயலாளராகவும் கன்னியாகுமரி சேனம்விளையை சேர்ந்த சுரேஷ் பிரகாஷ், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும், சென்னை அண்ணாநகரை சேர்ந்த காளிதாஸ், ராயபுரம் பகுதியை சேர்ந்த சிவராஜ் மற்றும் மதுரை கூடல் நகரை சேர்ந்த சோலை குணசேகரன் ஆகியோர் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

செய்தித்தொடர்பாளர்களாக கண்ணன்(விருதுநகர்), முடிமண் ராமசாமி( தூத்துக்குடி) ஆகியோரும், சென்னை ராயபுரத்தை சேர்ந்த ரவி இளைஞர் அணி செயலாளராகவும், திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த பரமசிவன் விவசாய அணி துணைச் செயலாளராகவும், பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கியம்மாள் மகளிர் அணி துணைச் செயலாளராகவும், களக்காடு பகுதியை சேர்ந்த இசக்கியப்பன் தலைமைக் கழக பேச்சாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: