புதுடெல்லி: சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை நிறுத்தப்பட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மவுலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் என்ற பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் முஸ்லிம், கிறிஸ்தவம், புத்தம், பார்சி, சீக்கியம், சமணம் என 6 சிறுபான்மை சமூகத்தினர் பயனடைந்தனர். இந்த உதவித்தொகை நிறுத்தப்படுவதாக கடந்த டிசம்பரில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். இதற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிடுகையில், மவுலானா ஆசாத் நேஷனல் பெல்லோஷிப் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வழக்கப்பட்டு வந்த கல்வி கடனும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.