இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டுக்கான படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு அதிகாரம்: தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டுக்கான படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது . அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்மகன் உசேன் அனுப்பிய ஒப்புதல் படிவத்தில் பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலர் என குறிப்பிடவில்லை. இரட்டை இலை ஒதுக்கீடு செய்ய தேவையான ஏ,பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் அவைத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை அங்கீகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவரை அதிகாரபூர்வ வேட்பாளராக பொதுக்குழு அங்கீகரிக்கிறது. அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் தென்னரசு என்பதை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரியப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: