ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: தென்தமிழகம் , வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழக்க கூடும். தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் பிப்ரவரி 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக, 04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.05.02.2023 முதல் 07.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Related Stories: