வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்கள் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்: கிருஷ்ணகிரி எஸ்பி பேட்டி

கிருஷ்ணகிரி: ‘வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞர்கள், உள்ளூர் பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்’ என்று கிருஷ்ணகிரி எஸ்பி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எருதாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில்,  உள்ளூரைச் சேர்ந்த பெண்களிடமும், பெண் போலீசாரிடமும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறி நடக்க முயன்றனர்.

மேலும், அவர்கள் மீது கற்களை வீசியும், ஆபாசமான வார்த்தைகளாலும் பேசினர். இதனால் அவர்களை பிடித்து அமர வைத்தோம். அந்த நேரத்தில் நடந்த நிகழ்வை தான், எஸ்பி லத்தியால் அடிக்கிறார். பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார் என்று சிலர் தவறாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். உண்மையிலேயே அங்கு என்ன நடந்தது என்று அங்கிருந்த போலீசார், உள்ளூர் மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தெரியும். இவ்வாறு எஸ்பி கூறினார்.

Related Stories: