அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு

ஈரோடு முனிசிபல் காலனியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை ஓபிஎஸ் அணியின் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர்  அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் அமைத்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி. இபிஎஸ் அணியினர் அமைத்துள்ளது முற்போக்கு கூட்டணி.

அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணியே (நோய்) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தான். எங்கள் பக்கம் 99 சதவீத தொண்டர்கள் உள்ளனர். அதை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வந்தால் நிரூபித்து காட்டுவேன். ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும் எங்களது வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி.இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

Related Stories: