அரசின் சேவைகள் மக்களுக்கு கிடைக்க பொதுசேவை பெறும் உரிமை சட்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: .பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ளஅறிக்கை: பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். இச்சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இச்சட்டம் மூலமாக சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

அதன்படி, குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும். இதன்மூலமாக அதிகாரிகள் உடனடியாக சேவை வழங்குவர்.

அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே, இச்சட்டத்திற்கான முன்வரைவை வரக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: