மனைவியை சேர்த்து வைக்க வலியுறுத்தி போலீஸ் நிலையத்தில் கணவன் தர்ணா

கோவை: மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கோவை போலீஸ் நிலையத்தில் கணவன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (29). இவரின் மனைவி ஹர்ஷினி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ஹர்ஷினி, குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, கார்த்திக் தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி, குழந்தைகளை அழைத்துள்ளார். ஹர்ஷினியின் பெற்றோர் அனுப்ப மறுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை கழற்றிய கார்த்திக், தாலியுடன் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் வந்தார். பின்னர், காவல் நிலையம் முன்பு அமர்ந்து தனது மனைவி, குழந்தைகளை சேர்த்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசார் கார்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தி அனுப்பினர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் கார்த்திக் மனைவி, அவரின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: