புதுச்சேரியில் பெண்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மதுபான விடுதிகளை மூட கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர காவல்துறையினர் தடுத்தால் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்ற அனைத்து மகளிர் கூட்டமைப்பினரை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடத்தனர். அவர்கள் தடையை மீறிய போது தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மதுபான கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும் என்றும் மூடப்பட்ட நியாயவிலை கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார். மின்கட்டணம், சமையல் எரிவாய்வு, காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்தாத அரசு மதுபான கேளிக்கை விடுதிகளை மட்டும் திறப்பதாக மகளிர் அமைப்பினர் கூற்றம் சாட்டினார். சலுகைகள் இல்லாத புதுச்சேரியை விட்டு தமிழ்நாட்டிற்கு  குடிபெயர போவதாக அவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கலைத்துள்ளனர்.    

Related Stories: