மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான நிரந்தர பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 570 ஒப்பந்த செவிலியர்களுக்கான நிரந்தர பணி ஆணைகள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட177 இருட்டறை உதவியாளர்கள், 19 ஆய்வக நுட்புநர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

அதேபோல் 21 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். நிரந்தர பணி நியமன ஆணைகளை வழங்கும் விதமாக 3 ஒப்பந்த செவிலியர்கள், 5 இருட்டறை உதவியாளர்கள், 3 ஆய்வக நுட்புநர்கள் மற்றும் 4 இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை நேரடியாக முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து இவர்கள் உடனடியாக பணியில் சேர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Related Stories: