ஆவூர் ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில் பள்ளி கட்டிடத்துக்கு பூமி பூஜை

பொன்னேரி: ஆவூர் ஊராட்சி அரசு பள்ளியில் நேற்று மாலை ரூ.28 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடப் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி பங்கேற்று பணிகளை துவக்கிவைத்தாதிருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக 23 அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு சமீபத்தில் தமிழக அரசு ரூ.7.28 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன்படி, ஆவூர் ஊராட்சியில் புதிய அரசு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை ஆவூர் ஊராட்சியில் அரசு பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டிடப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி பங்கேற்று, புதிய பள்ளி கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார். இதில் துணை பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி பூமிநாதன், திமுக ஒன்றிய செயலாளர் சுகுமாரன், ஒன்றிய ஆணையர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் நந்தினி மூர்த்தி, ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், பள்ளி தலைமை ஆசிரியர் குமுதம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருள், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: