காஞ்சிபுரத்தில்,ஏகாம்பரநாதர் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் தெப்பத்திருவிழாவில்,  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரிய கோயிலாக இந்த திருக்கோயில் விளங்குகிறது. முன்னதாக, ஏகாம்பரநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து, ஏலவார்குழலியும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 3 முறை தெப்பத்தில் வலம் வந்தனர்.  

நாளை வெள்ளிக்கிழமையும் தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் மற்றும் கோயில் சிவாச்சாரியார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: