குடும்பத் தகராறில் விபரீதம்: கிணற்றில் குதித்த மனைவி சாவு காப்பாற்ற முயன்ற கணவனும் பலி

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தவர் விஜயகுமார் (30). இவரது மனைவி கௌசல்யா (22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 4 வயதில் ஒரு மகனும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் வழக்கம் போல் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கௌசல்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி குத்தகை நிலத்தில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவன் விஜயகுமார், மனைவியை காப்பாற்றும் முயற்சியில் தானும் கிணற்றில் குதித்தார். ஆனால் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்கள். சத்தம் கேட்டு அங்கு வந்த விஜயகுமாரின் தந்தை முனியன், இருவரும் நீரில் மூழ்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இருவரையும் சடலமாக மீட்டனர்.

Related Stories: