வேட்டியை மடிச்சு கட்டினா... அன்புமணி எச்சரிக்கை

வடலூர்: பாமக சார்பில் நிலம், நீர், விவசாயம் காப்போம் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: என்எல்சிக்கு அவசரமாக  நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். அன்புமணி என்றால் டீசன்ட் அன்ட் டெவலெப்மென்ட் பாலிடிஸ்னு.. நினைக்கிறாங்க, நான் வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது- (மேடையிலே வேட்டியை மடித்து கட்டி மண்வெட்டியை கையில் பிடித்தபடி) என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம் என சூளுரைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: