ரூ.3,690 செருப்பு என்னுது... இந்தா பிடிங்க பில்லு...

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வேட்பாளர் தென்னரசு மற்றும் 15க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று சென்றனர். பின்னர் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை. இதனால் டென்சனான அவர், செருப்பை அந்த இடம் முழுவதும் தேடிப்பார்த்தார். இவரது பதட்டத்தை பார்த்த நிர்வாகி ஒருவர் தனது செருப்பை வழங்கி விட்டு, கே.வி.ராமலிங்கத்தின் செருப்பை தேடினார்.

நிருபர் ஒருவரிடம் சென்று அவர், இது உங்கள் செருப்பு தானா? மாற்றிப்போட்டுவிட்டீர்களா? என்றார். உடனே அந்த நிருபர், இது எனது செருப்பு. இதற்கு பில்கூட வைத்திருக்கிறேன் என்று கூறி வாட்ஸ்அப்பில் பில்லை காட்டினார். செருப்பின் விலை ரூ.3,690. அப்போது அங்கு ஓடிவந்த போலீஸ்காரர், நிருபர்கள் யாரும் உள்ளே வரவில்லை என்றார். கடைசிவரை மாஜியின் செருப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் கே.வி.ராமலிங்கம் ஈரோடு சென்றார்.

Related Stories: